இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 203 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், கோலி, புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி என இந்திய அணி வலுவான துடுப்பாட்ட வரிசையுடன் இன்றும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று முகமது ஷமி, அஸ்வின் பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக இருக்கும் என நம்பலாம்.
எனினும், தென்னாப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியை பறிகொடுத்ததால் இதில் நிச்சயம் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

