பாகிஸ்தானில் இந்திய சினிமாக்கள், விளம்பரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. இந்திய விமானப்படை இன்று அதிகாலை காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியான பாலகோட்டில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய சினிமாக்களை வெளியிடவும் இந்தியாவில் பாகிஸ்தான் விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் சவுதாரி பாவத் ஹூசைன் தெரிவித்துள்ளார்.