Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய உயர்ஸ்தானிகருக்கு “நாகமரம்” கொடுத்த வடமாகாண ஆளுநர்

February 18, 2019
in News, Politics, World
0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ தரன்ஜித் சிங் சந்துவுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.

இந்திய இல்லத்திற்கு வருகைதந்த ஆளுநரை இந்திய உயர்ஸ்தானிகர் உற்சாகமாக வரவேற்றார். இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் ஆளுநர் நாக மரக்கன்று ஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் வழங்கினார்.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆளுநர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சார்பிலும் அரசின் சார்பிலும் வட மாகாண மக்கள் சார்பிலும் தனது நன்றியினை தெரிவித்தார்.

Previous Post

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

Next Post

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்திய பெண்ணால் பரபரப்பு

Next Post

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்திய பெண்ணால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures