இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குசல் மென்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு20 ஓவர் தொடர் முடிந்ததும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் மார்ச் 4-ந்தேதி மொகாலியிலும், 2-வது டெஸ்ட் மார்ச் 12-ந்தேதி பெங்களூருவிலும் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குசல் மென்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா அணிக்கு திரும்பியுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை டெஸ்ட் அணி வருமாறு:-
திமுத் கருணாரத்னே (கேப்டன்), நிசாங்கா, திரிமன்னே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், சன்டிமால், அசலங்கா, டிக்வெல்லா, சமிகா கருணாரத்னே, லாஹிரு குமாரா, லக்மல், சமீரா, விஷ்வா பெர்னாண்டோ, ஜெப்ரி வாண்டர்சே, ஜெயவிக்ரமா, எம்புல்டெனியா. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் நேற்றே இந்தியா வந்து சேர்ந்தனர்.
#No 1 TamilWebSite
| http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
#No 1 TamilWebSite
