இந்தியா-ரஷ்யா நட்புறவு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தார், இந்தியா-ரஷ்யா நட்பு எவ்வளவு வலுவானது என்பதைக் இந்த இருதரப்பு நடைப்பவணி வெளிப்படுத்தியுள்ளதாக தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதரக அதிகாரி ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, 1947ல் இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வின் ஆண்டு விழா பல்வேறு செயல்பாடுகளுடன். சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இது மிகவும் அடையாளப்பூர்வமான நிகழ்வாகும்.
இது எங்கள் நட்பு எவ்வளவு வலுவானது என்பதைக் காட்டுகிறது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் மற்றும் வலிமையிலிருந்து வலிமைக்கு செல்லும். இந்தியா-ரஷ்யா இடையேயான தூதரக உறவுகளின் 76வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்தியா-ரஷ்யா நட்புறவு நடைப்பவணி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெற்றது.