இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் இன்று இந்தியாவிற்கு பயணமாகியுள்ளனர்.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெறும் கடன் நிவாரண நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவு செய்துக்கொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]