Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்தியா என்ற ஒரே சினிமா : பார்வதி

November 8, 2017
in Cinema
0
இந்தியா என்ற ஒரே சினிமா : பார்வதி

சமீபகாலமாக தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மலையாளத்தில் பிரபலமான நடிகையும், தமிழில் பூ, மரியான போன்ற படங்களில் நடித்தவருமான பார்வதியும், இர்பான் கான் உடன் “காரிப் காரிப் சிங்கிள்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தவாரம் வெள்ளிக்கிழமை (நவ., 10) வெளியாக உள்ள இப்படம் பற்றியும், தனது பாலிவுட் அறிமுகம் குறித்தும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது…

பாலிவுட் படத்தில் நடிக்க என்ன காரணம்?
காரிப் காரிப் படத்தின் கதை தான் முக்கிய காரணம். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது சிரித்து கொண்டே இருந்தேன், அந்தளவுக்கு நகைச்சுவையான படம். இன்னொரு விஷயம் இயக்குநர் தனுஜா சந்திரா படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். தனுஜா, ஹிந்தியில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் இந்த கதையை இயக்கியிருந்தாலும் நிச்சயம் நான் நடித்திருப்பேன். என்னை பொறுத்தமட்டில் மொழி ஒரு பிரச்னை இல்லை, கதை தான் முக்கியம். மராத்தி, பெங்காலி, போஜ்புரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கூட நடிப்பேன்.

பாலிவுட் சினிமா பற்றி உங்கள் கருத்து?
என்னை பொறுத்தமட்டில் எந்த துறையும் எனக்கு புதிது கிடையாது. எல்லாம் இந்தியா என்ற ஒரு சினிமா துறை தான். நான், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளேன். தெலுங்கு படத்தில் மட்டும் நடிக்கவில்லை, காரணம் எனக்கான கதைகள் அங்கு இல்லை. நான் நடித்த 18 படங்களை போலவே காரிப் காரிப் சிங்கிள் படத்திலும் நடித்தேன்.
இர்பான் கான் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி?
இர்பான் உடன் பணியாற்றியது மகிழ்ச்சியான தருணம். அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவருடன் நடிப்பது நம்மையும் கலகலப்பாக்கும். என்னை பொறுத்தமட்டில் அவருடன் நடித்ததை ஒரு நடிப்பு பட்டறையில் பயிற்சி பெற்றதை போன்றே உணர்கிறேன். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.

இர்பானிடம் உள்ள ஏதாவது ஒரு கெட்ட பழக்கம்?
இர்பான் உடன் நான் நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை, அதனால் அவரிடம் உள்ள கெட்ட பழக்கத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரிடம் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அதாவது, நான் தான் இயக்குநரிடம் அதிக கேள்வி கேட்கிறேன் என்றால் அவர் என்னை விட அதிகமாக கேள்வி கேட்பார். மற்றபடி வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை. மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் அப்போது பார்த்து சொல்கிறேன்.

ஒரு படத்தை தேர்வு செய்யும் முன் நீங்கள் முன்னுரிமை கொடுப்பது ஹீரோவுக்கா… இல்லை இயக்குநருக்கா…?
எனக்கு கதை தான் மிக மிக முக்கியம். அதன்பிறகு இயக்குநர் யார் என்று பார்ப்பேன். ஏனென்றால் அவர் தான் அந்த படத்தின் கேப்டன். மற்றபடி யார் ஹீரோ என்றெல்லாம் பார்க்கமாட்டேன். கதை பிடித்திருந்தால் போதும், ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். இந்த காரிப் காரிப் சிங்கிள் படம் கமிட்டானபோது கூட யார் ஹீரோவாக நடிக்கிறார்கள் என்று தெரியாது. கதை பிடித்திருந்தது நடித்தேன்.

பாலிவுட்டில் உள்ள மூன்று கான்களில், உங்களுக்கு பிடித்தவர் யார்?
அப்படியா யாரையும் குறிப்பிட்டு சொல்ல தெரியவில்லை. ஒவ்வொருத்தருக்கும், அழகு, புகழ், பலம், பலவீனம் எல்லாம் உள்ளது. ஆகையால் மூவரில் யார் பிடித்தமானவர்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

இவ்வாறு பார்வதி கூறினார்.

Previous Post

சிரஞ்சீவி வீட்டில் திருட்டு: வேலைக்காரர் கைது

Next Post

நடிகர்கள் கூச்சமின்றி, அச்சமின்றி இருக்க வேண்டும்: வித்யாபாலன்

Next Post

நடிகர்கள் கூச்சமின்றி, அச்சமின்றி இருக்க வேண்டும்: வித்யாபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures