Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தத்தளிக்கும் இலங்கை

March 13, 2022
in News, Sports
0
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தத்தளிக்கும் இலங்கை

இந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) ஆரம்பமான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

Dimuth Karunaratne and Rohit Sharma greet each other at the toss, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

இந்தியாவினால் பெறப்பட்ட சுமாரான மொத்த எண்ணிக்கைக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

Suranga Lakmal, playing his final Test, looks on as the Sri Lankans huddle, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

துடுப்பாட்டக்காரர்களின் கவனக்குறைவும் தவறான துடுப்பாட்ட வியூகமும் இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணமானது.

Lasith Embuldeniya is congratulated by his team-mates after dismissing Rohit Sharma, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

ஆரம்ப வீரராக களம் இறங்கிய குசல் மெண்டிஸ் (2), 3ஆம் இலக்க வீரர் லஹிரு திரிமான்ன (8) ஆகிய இருவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்.

Hanuma Vihari drives towards the covers, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

மொஹம்மத் ஷமியின் பந்துவீச்சை சரியாக தடுத்தாடத் தவறிய அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (4) போல்ட் ஆனார்.

தனஞ்சய டி சில்வா 10 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹம்மத் ஷமியின் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

Dhananjaya de Silva celebrates with captain Dimuth Karunaratne after sending back Virat Kohli, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

ரிஷாப் பன்ட் கேள்வி எழுப்பியபோது தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்கவில்லை என மத்தியஸ்தர் அறிவித்தார். ஆனால், ரிஷாப் பன்ட் விடாப்பிடியாக ரிவியூ செய்யுமாறு ரோஹித் ஷர்மாவிடம் மீண்டும் மீண்டும் கூறினார். ஷமியோ பந்து வெளியில் செல்வதுபோது சமிக்ஞை செய்தார்.

Suranga Lakmal knocked out Axar Patel's stumps for his first wicket, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

ஆனால், ஷர்மா ரிவியூ கோரியதை அடுத்து தொலைக்காட்சி சலன அசைவுகளில் பந்து விக்கெட்டை பதம்பார்ப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர் தனது தீர்ப்பை மாற்றி தனஞ்சய ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

சரித் அசலன் வந்த வேகத்திலேயே 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Mohammed Shami belts out an appeal, India vs Sri Lanka, 2nd Test, 1st day, Bengaluru, March 12, 2022

மறு முனையில் திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபொது அஷ்னின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

Jasprit Bumrah knocked over two early wickets, India vs Sri Lanka, 2nd Test, 1st day, Bengaluru, March 12, 2022

ஆட்டநேர முடிவின்போது திக்வெல்ல 13 ஓட்டங்களுடனும் இராகாப்பாளன் லசித் எம்புல்தெனிய ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

Rohit Sharma addresses his team before taking the field, India vs Sri Lanka, 2nd Test, 1st day, Bengaluru, March 12, 2022

இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் ஷமி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Dimuth Karunaratne was bowled by Mohammed Shami, India vs Sri Lanka, 2nd Test, 1st day, Bengaluru, March 12, 2022

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி அதன் முதலாவது இன்னிங்ஸில் சகல விக்டெக்ளையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது.

Shreyas Iyer lines up to switch-hit, India vs Sri Lanka, 2nd Test, Bengaluru, 1st day, March 12, 2022

ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி பெற்ற அரைச் சதமே இந்தியாவை ஓரளவு கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றது.

Shreyas Iyer acknowledges the Bengaluru crowd, India vs Sri Lanka, 2nd Test, Day 1, Bengaluru, March 12, 2022

ஆரம்ப வீரர் மயங்க் அகர்வால் அவசரமாக ஒரு ஓட்டத்தை எடுக்க முயற்சித்து ரன் அவுட் முறையில் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

Shreyas Iyer launches one over long on, India vs Sri Lanka, 2nd Test, Day 1, Bengaluru, March 12, 2022

தொடர்ந்து அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது லசித் எம்புலதெனியவின் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஹனுமா விஹாரியும் விராத் கோஹ்லியும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 47 ஓட்டங்ளைப் பகிர்ந்திருந்தபோது ஹனுமா விஹாரி, ப்ரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து நடையைக் கட்டினார்.

Angelo Mathews' 43 included two sixes, India vs Sri Lanka, 2nd Test, 1st day, Bengaluru, March 12, 2022

அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லி 23 ஓட்டங்கள் பெற்றநிலையில் தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் களம் விட்டகன்றார்.

இந் நிலையில் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 126 ஓட்டங்களாக உயர்த்தியபோது ரிஷப் பன்ட் 39 ஓட்டங்களுடன் எம்புல்தெனியவின் பந்தில் போல்ட் ஆனார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் ரவிந்த்ர ஜடேஜா (4), ரவிச்சந்திரன் அஷ்வின் (13), அக்ஸார் பட்டேல் (9), மொஹம்மத் ஷமி (5) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

மறுபுறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் திக்வெல்லவினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இலங்கை பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லசித் எம்புல்தெனிய 94 ஓட்டங்களுக்கு 3 விக்டெக்களையும் தனஞ்சய டி சில்வா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

Previous Post

யாழ்ப்பாணக் கல்லூரி அணியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது யாழ்.சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி

Next Post

கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Next Post
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures