இந்தியாவின் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு உரங்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் குறித்த பகுதியில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் வேனில் இருந்து படகிற்கு மூடைகள் ஏற்றப்பட்டுக் கொண்டு இருந்தது. பொலிஸார் சம்பவத்தை அவதானித்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து பொலிஸார் வேிசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது 50 உர மூடைகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்தமை விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு கடத்தப்படவிருந்த உர மூடைகளின் மதிப்பு இந்திய ரூபாவில் 10 இலட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து கடத்தப்பட இருந்த உரம் அதற்கு பயன்படுத்திய படகு, வேன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.