இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒருகோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.
இந்த கொள்கலனிலிருந்து 16 இலட்சம் ரூபா பெறுமதியான 2இலட்சம் டிரெமடோல் மாத்திரைகள், 72 இலட்சம் ரூபா
பெறுமதியான 8 ஆயிரத்து 500 சோடி ஆண் ,பெண்களுக்கான செருப்புக்கள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 4 ஆயிரம் சோடி ஆண், பெண்களுக்கான சப்பாத்துக்கள் ஆகியன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
துணி வகைகளை இறக்குமதி செய்வதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்தே இப்பொருட்கள் அடங்கிய கொள்கலன் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.