இந்தியாவின் 207 ஆடை தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி 2020-21ஆம் ஆண்டில் 2.21 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2021-22ஆம் ஆண்டில் 2.85 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இது 28.4 சதவிகித வளர்ச்சி என்று மத்திய ஆடை உற்பத்தித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவின் 207 ஆடை தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி 2020-21இல் 2.21 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2021-22இல் 2.85 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இது 28.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளதாக ஜர்தோஷ் எழுத்துப்பூர்வமாக அறிவித்தார்.
நாட்டில் ஆடை தொழில்நுட்பத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 1,480 கோடி ரூபாய் செலவில் 4 ஆண்டுகளுக்கு தேசிய ஆடை தொழில்நுட்ப அமைப்பை அரசாங்கம் அமைத்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 15-20 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
2024ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு சந்தையின் அளவை 40-50 பில்லியன் அமெரிக்க டொலராகக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஆடை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஊடாக ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றார்.