சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 22 இற்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
அவர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 28 வயதுடைய முந்தலம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.