அடுத்த ஆண்டு நடைபெறும் 15 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15 ஆவது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன.
மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும். புதிய அணிகளை சேர்ப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.
இந் நிலையில், ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டுபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் லக்னோ அணியை சுமார் 7090 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளது.
தனியார் ஈக்விட்டி நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம், அகமதாபாத் அணியை 5625 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கி உள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]