இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் இந்துக்களி டையே பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இது திட்ட மிட்டு நடத் தப்படும் ஒடுக்குமுறை என்று பல தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
தமிழ் அரசியல் கட்சிகளின் தலை வர்கள், உறுப்பினர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர், பொது அமைப்புகளைச் சேர்ந்தோர் அரசின் இந்த நடவடிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.அந்த அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டி நிர்ப்பந்தம் வரும் என்றும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்நு ஒரு சில பிரதி அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்திருந்தார். காதர் மஸ்தானை இந்து கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக அவர் நியமித்திருந்தார். அதையடுத்தே இந்தச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சுப் பதவியானது இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கிருப்பது அரசு திட்டமிட்டு நடத்தும் ஒடுக்கு முறை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
பிரதி அமைச்சர் நியமனம் இந்து மக்களிடையே சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிகின்றேன். இது தொடர்பில் உரிய தரப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னரும் இவ்வாறு ஒரு நியமனம் வழங்கப்பட்டிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் சமூக வலைத் தளங்களிலும் பேசு பொருளாகியுள்ளது. பெரும்பாலானாவர்கள் அரசின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.