இத்தாலியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 600 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. கால்சி அருகே பிசா பகுதியில் உள்ள மான்டே செரா வனத்தில் திடீரென்று பற்றிய காட்டுத்தீ மளமளவென மற்ற பகுதிக்கும் பரவியது. இந்த பயங்கர தீ விபத்தில் 600 ஏக்கர் வனப்பகுதிகள் சேதமடைந்தது. விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீயை அடுத்து கால்சி மற்றும் விகோபிசனோ நகரங்களைச் சேர்ந்த சுமார் 700 பேரை அவர்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் இரட்டை இயந்திரம் கொண்ட கேனட் ஏர் விமானம் மூலம் தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

