யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீழ்ந்த இடி மின்னல் தாக்கம் காரணமாக வாழ்வாதாரமாக வளர்த்த இரு ஆடுகள் இறந்ததோடு இரு தென்னைகளும் எரிந்து நாசமாகியது.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் நின்ற தென்னைகள் மீதே இடி மின்னல் தாக்கம் வீழ்ந்துள்ளது. இதன்போது இரு தென்னைகளிலும் தீ பற்றி எரிந்தமையினால் தென்னைகள் கருகி நாசமாகின.
இதேநேரம் குறித்த வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட இரு ஆடுகள் தென்னை மரத்தின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்த பெறுமதி மிக்க இரு ஆடுகளும் பரிதாபகரமாக உயிரிழந்தன.
இதேநேரம் கடந்த 5 தினங்களில் வடக்கில் இடம்பெற்ற 5 வது தாக்கமாகும் இவ்வாறு இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்த்தோடு நால்வர் படுகாயமுற்ற அதேநேரம் பல தென்னைகளும் நாசமான நிலையில் தற்போது இரு ஆடுகளும் உயிர் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.