கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு இலகுவான 220 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.
முதலாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களம் இறங்கிய இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சரித் அசலன்க 45 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் பவன் ரத்நாயக்க 29 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜோ ரூட், ஜெமி ஓவர்ட்டன், ஆதில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
