Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆஸி.யை வீழ்த்தி ஆறுதல் வெற்றி

February 20, 2022
in News, Sports
0
ஆஸி.யை வீழ்த்தி ஆறுதல் வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி:20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

Image

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தசுன் ஷாக்க தலைமையிலான இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் விளையாடி வந்தது.

முதல் நான்கு ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த நிலையில் ஐந்தாவதும், இறுதியுமான போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா சார்பில் அதிகபடியாக மேத்யூ வேட் 43 (27) ஓட்டங்களையும், மேக்ஸ்வெல் 29 (21) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர தலா 2 விக்கெட்டுகளையும், பிரவீன் ஜயவிக்ரம, சமிக கருணாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

155 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் ஆட்டமிழக்காது 69 (58) ஓட்டங்களையும், தசுன் ஷாக்க 35 (31) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

Image

எவ்வாறெனினும் அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

எலிசபெத் மகாராணிக்கு கொவிட்-19 தொற்று

Next Post

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜெனிவா கடிதத்தினை கைவிடும் சாத்தியம்

Next Post
ஐ.நா.தீர்மானத்தை புறக்கணிக்கிறது இலங்கை  – ஐ.நா. ஆணையாளருக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜெனிவா கடிதத்தினை கைவிடும் சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures