ஆவா குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு வட மாகாணத்தில் பணிபுரியும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளன.
வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

