குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் விநியோகித்த துண்டறிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எனது அலைபேசி இலக்கத்துக்கு அதிகளவான முறைப்பாடுகளும், தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுகின்றார் என்று தெரிவித்தார்.
மகனைக் காப்பாற்றத் தான் முயன்றும் முடியாது போனது என்று கூறிய அந்தத் தாய் எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்முடன் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினார்.
இது போன்ற பல தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம் – என்றார்.

