முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட 8பேரும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி மதியம் 12.30 அளவில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைச் சிறுமிகள் நால்வர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் அதேகிராமத்திலுள்ள குளக்கரையில் அடக்கம் செய்யப்பட்டன.
அவர்களது உறவினர்கள் அந்த இடத்தில் நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.