அனைத்தையும் விட மனித உரிமை பாதுகாப்பு முக்கியமானது என அமெரிக்க செனெட்டின் வெளிஉறவு குழு தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கையின் பாதுகாப்பு படையினரின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து அச்சமடைந்துள்ளேன்.
இலங்கை ஜனாதிபதியை இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாசைகளுடன் ஈடுபாட்டை காட்டுமாறும் பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் பரந்துபட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்காக பாடுபடுமாறு நான் வலியுறுத்திகேட்கின்றேன்.
அனைத்தையும் விட மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.