Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆரோக்கியமான சமூகம் ஒன்றினை உருவாக்க தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள்

March 14, 2019
in News, Politics, World
0

ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் காணப்படுகின்ற தோட்டப்புற மக்களை ஆரோக்கியமான மக்களாக வாழவைப்பதற்காக தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைத்து இரசாயன கலவை அற்ற மரக்கறிகளையும் உணவுகளையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்  ஒன்றினை தோட்ட நிர்வாகம் சேவ் த சில்ரன் நிறுவனத்துடன் இணைந்து தோட்டப்பகுதியில் முன்னெடுத்து வருகிறது

இந்த வேலைத் திட்டத்தின் மூலம் சிறுவர் நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு இரசாயனம் அல்லாத போசனை நிறைந்த உணவு வழங்குவதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன  இதற்காக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களில் பச்சை வீடுகள் அமைத்து சேதனப் பசளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் சிறுவர் நிலையங்ளில் உள்ள சிறார்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர்

இந்தத் திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் மந்த போசனத்தினை இல்லாது செய்து சிறந்த போசனை மிக்க உணவு பழக்கங்கள் மூலம் ஆளுமைமிக்க சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்  இதற்காக பச்சை வீடு திறப்பு நிகழ்வு  சேவ் த சில்ட்ரன் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹெலன் ஹை என்சன் தலைமையில் களனிவெளி பெருந்தோட்ட  கம்பெனிக்கு சொந்தமான எடின்ப்ரோ தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வுக்கு முகாமையாளர் உதித்த தென்னகோன், நிறுவனத்தின் சேவை நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ரவி வர்மா உட்பட முகாமையாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

Previous Post

குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வருமாறு அரியநேத்திரனுக்கு அழைப்பு

Next Post

உயிரை பணயம் வைத்து சிறுவனை மீட்ட இளைஞர்

Next Post

உயிரை பணயம் வைத்து சிறுவனை மீட்ட இளைஞர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures