Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் – பைடன் உறுதி

July 9, 2021
in News, World
0
ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் – பைடன் உறுதி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார்.

 

மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு ஒன்றிணையுமாறு நாட்டின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

20 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்க ஒரு காலத்தில் கொண்டு வர விரும்பிய சிறந்த நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 2001 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

இதில் அங்கு ஆட்சியிலிருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது.‌

ஆனாலும் அதே ஆண்டு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது.‌

இந்தப் போரில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. 20 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டு போரில் தலீபான்களின் தாக்குதலில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த சூழலில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாகத் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது.‌

ஆனால் அமெரிக்காவில் ட்ரம்புக்கு பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜோ பைடன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப‌ பெறப்படும் என அறிவித்தார்.

அதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன.‌

ஒரு கருத்துக் கணிப்பின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றுவதற்கான பைடனின் முடிவை பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஆதரிக்கின்றனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது இலக்குகளை நிறைவேற்றியதாக 28 சதவீதமானோர் மாத்திரம் ஒப்புக் கொண்டனர், மேலும் 43 சதவீதமானோர் படைகளை திரும்பப் பெறுவது அல்கொய்தாவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பல பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கும் ஒரு வரி பரிகாரங்கள்

Next Post

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

Next Post
குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வை கற்றுக்கொடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures