ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.ரம்ஜான் மாதத்தையொட்டி, ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் தற்காலிக போர் நிறுத்தத்தை அந்நாட்டு அரசும், தலிபான் தீவிரவாத அமைப்பும் பரஸ்பரம் அறிவித்தன. நாளையுடன் போர் நிறுத்த காலம் முடிய உள்ள நிலையில், மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிப்பதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்று, நன்கர்ஹர் மாகாணத்தின் ரோதத் மாவட்டத்தில் நேற்று மக்களும், ராணுவ படையினரும், தலிபான்களும் கொண்டாடினர். அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், 20 பேர் பலியாயினர். 16 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ரம்ஜான் தினத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.