சிலாபம் ஆனமடுவ ஆடியகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றதா பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக அமைந்ததென்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாதிருக்கின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.