ஆந்திரவாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள் 87 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பொலிஸாரின் அடாவடியால் ஆந்திர மாநில திருப்பதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் , பாரவூர்தியில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற 87 பேரையும் கைது செய்தனர் எனக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் ஆந்திர பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.