இரத்தினபுரி புலுதொட்டயிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளரே
எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொழிற்சாலையின் முன்னால் நிறுத்தப்பட்ட பஸ் மற்றும் முச்சக்கரவண்டி
ஆகியனவும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியும் நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.