இந்த விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா இராசேந்திரன்குள ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன், வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதுன்டு குடை சாய்ந்தது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.