இரத்மலானையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த ஆடை தொழிற்சாலையிலுள்ள களஞ்சியசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
தீயை பொலிஸார் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.