பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

