ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இறுதி தீர்வில்லாமல் நிறைவடைந்துள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக் கொள்வதா,இல்லையா என்பதும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலான இறுதி முடிவும் நாளை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]