Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசியாவில் மிக மோசமான கொவிட் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை – சுகாதார வைத்திய நிபுணர்கள்

September 2, 2021
in News, Sri Lanka News
0
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

இலங்கையில் கொவிட் மரணங்களானது 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையில் அபாயகரமான கட்டத்தில் இலங்கை உள்ளதாகவும், தெற்காசியாவில் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தூரநோக்குதிட்டங்களை விடவும் மக்களை பாதுகாக்க உடனடி தீர்மானங்களை இப்போது முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தெற்காசிய வலயத்திற்கான கொவிட் நிலைமைகள் குறித்து உலக சுகாதார தாபனம் தனது அறிக்கையை முன்வைத்துள்ள நிலையில், சுகாதார தரப்பினர் அறிக்கை குறித்தும் இலங்கையில் நிலைமைகள் குறித்தும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பாளர்பேராசிரியர் நீலிகா மளவிகே கூறுகையில்,

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக்குகுழுவுடன் இணைந்து இலங்கையின் வைத்திய நிபுணர்கள் 15 பேர் ஆய்வு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம்.

ஏற்கனவே இணைந்த அறிக்கை ஒன்றுவெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் புதிய அறிக்கை ஒன்றினைமுன்வைத்துள்ளது.

இதில்  இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில்,

கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கை இந்தியாவின் மரணவீத அதிகரிப்பினால் மோசமான பதிவுகள் பதிவாகியுள்ளன.

எனவே நிலைமைகளை கட்டுப்படுத்த துரிதமானஅதேபோல் கடுமையான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இப்போதும் நாம் ஆபத்தானகட்டத்தில் உள்ளோம் என்பதை ஏற்றுக்கொண்டு தற்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியநடவடிக்கைகளை ஆராய வேண்டும்.

இப்போது நீண்டகால தூரநோக்கு திட்டங்களை ஆராய்ந்து கொண்டிருக்காது மக்களை காப்பாற்றும் தீர்மானங்கள் எடுப்பதே முக்கியம். ஆசியாவில் மிக மோசமான வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை அடையாளபடுத்தப்படுகின்றது என்பதை மனதில் வைத்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தலைமகன்: கேசுதன் கவிதை

Next Post

இந்தி பிக்பொஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

Next Post
இந்தி பிக்பொஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

இந்தி பிக்பொஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures