அஹிம்சை மூலம் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி இந்தியாவின் மாற்றத்துக்கு வழிவகுத்தவர் மகாத்மா காந்தியென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாரதபிதா அமரர் மகாத்மா காந்தியின் 150 வது நினைவு தினத்தையொட்டிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுக்கையில்,
தமது அஹிம்சைப் போராட்டம் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பங்ளிப்புச் செய்து இலங்கை மட்டுமன்றி முழு உலகிற்கும் முன்னுதாரணமானவர் மகாத்மா காந்தி.
அவரது 150வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இவ்வேளையில் இலங்கை பாராளுமன்றத்திலும் அதனை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். அவரது அழுத்தங்கள் முழு இந்தியாவுக்குமான அழுத்தமாகியது. அவரது தரிசனம் முழு உலகிலும் வியாபித்துள்ளது. அஹிம்சையே அவரது போராட்டத்தின் வடிவமானது.
கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக நிலவிய அஹிம்சாவாத போராட்டங்கள் அவரது தரிசனத்திலிருந்து உருவாகியவையே அஹிம்சாவாத மூர்த்தியென காந்தி வர்ணிக்கப்படுகின்றார்.
அஹிம்சையையே அவர் போதித்தார். நோக்கங்களை அடைவதற்கு அஹிம்சையே சிறந்த வழி என்பதை அவர் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எடுத்துத்தார். இந்தியாவின் “சுய ராஜ்யம்” போராட்டத்தில் அவர் அஹிம்சையையே கையாண்டார். எப்போதுமே வன்முறையைக் கையிலெடுக்கக்கூடாது என்றும் அதிலிருந்து விலகிச் செயற்படவேண்டுமென்றும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் மாற்றங்களை ஏற்படுத்த எண்ணிய அவர் மக்களை ஒன்றுதிரட்டியே போராட்டங்களை மேற்கொண்டார். அஹிம்சை மூலமே அவர் ‘சுயராஜ்ய’ போராட்டங்களை மேற்கொண்டார். அஹிம்சை மூலமே அவர் ‘சுயராஜ்ய’ போராட்டத்தில் வெற்றிகொண்டார்.
சுய ராஜ்ய போராட்டத்தின் மூலம் அவர் அரசியல் விடுதலையை மட்டுமன்றி சுயமான வளர்ச்சி, கிராமங்களின் முன்னேற்றம் போன்றவற்றையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். 20 ஆம் நூற்றாண்டில் ஆயுதங்கள் அதிகரித்ததுடன் தனி ராஜ்யங்கள் உருவாகின. சோவியத் புரட்சி போன்ற புரட்சிகள் வெடித்தன. எனினும் அவர் அஹிம்சை எனும் ஆயுதத்தையே கையிலெடுத்து போராடினார்.’
‘அநீதியின் மத்தியில் சத்தியம் வெற்றிபெறும்’ என்றும் இருளின் மத்தியிலும் ஒளிபிறக்கும்’ என்பதும் அவரது வாக்காக அமைந்து. அதையே இந்திய மக்களின் நம்பிக்கையாக்கினார் காந்தி. இதனைப் பின்னர் இந்தியாவில் ஏனையோரும் பின்பற்றிவந்தனர்.