அவுஸ்ரேலியாவின் புதிய துணைப் பிரதமர் பதவிக்கு முன்னாள் ஊடகவியலாளர் மைக்கேல் மெக்கோர்மக் (Michael McCormack) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் இதுவரைகாலமும் துணைப் பிரதமராகப் பதவி வகித்துவந்த பார்னபி ஜாய்ஸ் துணைப் பிரதமர் மற்றும் தனது கட்சியின் தலைவர் பதவிகளிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமாச் செய்துள்ளார்.
இதனையடுத்து, துணைப் பிரதமர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பிராந்தியப் பத்திரிகையொன்றின் முன்னாள் ஆசிரியராக இருந்த மைக்கேல் மெக்கோர்மக்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.
ஊடக ஆலோசகரொருவருடன் அவரது உறவு, பெண்ணொருவர் மீதான பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பார்னபி ஜாய்ஸ் தனது துணைப் பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்ய நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.