Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் வடக்கில் மீள் எழுச்சி

May 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் வடக்கில் மீள் எழுச்சி

சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது.

பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating Resilient Opportunities for Work) – இது, இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் விளிம்புநிலைச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் காலநிலை மீள் எழுச்சி தன்மையினையும் சமூக வலுவூட்டலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைமாற்றமிக்க 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுகின்றது.

75,000 இற்கும் மேற்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களையும் 21,000 இற்கு மேற்பட்ட அங்கவீனமானவர்களையும் கொண்டுள்ள வட மாகாணம் பல வருட மோதலைத் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் காலநிலை ஆபத்துக்களைத் தொடர்ந்தும் கணிசமான சவால்களுக்குத் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்றது.

பொருளாதார வலுவூட்டல், சமூக உள்ளடக்கம் மற்றும் காலநிலை மீண்டெழுந்தன்மை ஆகியவற்றினைக் கொண்ட ஒரு மும்முனை உபாயமார்க்கத்தின் மூலம், ஒன்றை ஒன்று ஊடறுக்கும் இச்சவால்களை இக்கருத்திட்டம் நேரடியாக நிவர்த்தி செய்ய முனைகின்றது.

மாகாணத்திற்கு இக்கருத்திட்டம் கொண்டுள்ள பொருத்தப்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிப் பேசிய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவிக்கையில்,

“அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே அரசாங்கங்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தினை மீளக்கட்டியெழுப்புவதற்கான மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்குவதற்கான ஒத்துழைப்பும் புத்தாக்கமுமிக்க முயற்சிகளின் சாதகமான தாக்கங்களை நாம் பார்த்து வருகின்றோம். இக்கருத்திட்டமானது எமது சமுதாயங்களுக்காக உள்ளடக்கும்தன்மைமிக்க, காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான கூட்டுக் கடப்பாட்டினை எடுத்துவிளக்குகின்றது” எனக் குறிப்பிட்டார்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட,  LEED, LEED+, EGLR, PAVE கருத்திட்டங்கள் உள்ளிட்ட, சமாதானம் மற்றும் மீண்டெழுந்தன்மைக்காகத் தொழில்கள் நிகழ்ச்சித்திட்டத்தின்  (JPR) கீழ் ஒரு தசாப்தத்திற்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இடையீடுகளில் இருந்து GROW கட்டமைத்துச் செல்கின்றது.

2025 முதல் 2028 வரை அமுல்படுத்தப்படும் இக்கருத்திட்டம், காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க விவசாயம் மற்றும் நீரியல்வளம், சமூக வலுவூட்டல் மற்றும் சந்தை முறைமை அபிவிருத்தி மூலமாக நிலையான மற்றும் உள்ளடக்கும் தன்மை மிக்க தொழில்வாய்ப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவிக்கையில்,

“உறுதியான, வெற்றிமிக்க இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கான கூட்டு அபிவிருத்தித் தீர்வுகளில் அவுஸ்திரேலியாவினதும் இலங்கையினதும் அபிவிருத்திப் பங்காண்மை உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்துடன் சேர்ந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் GROW நிகழ்ச்சித்திட்டத்திற்காகப் பங்காண்மை அமைப்பதையிட்டு அவுஸ்திரேலியா ஆர்வம் கொண்டுள்ளது. வடக்கிலே ஒப்புரவுமிக்க வளர்ச்சியினையும் காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினையும் பிராந்தியத்திற்கான மீண்டெழுந்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட முன்னைய ஈடுபாடுகளில் இருந்து இது கட்டமைத்துச் செல்லும்” என குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியடனும் நோர்வே அரசாங்கத்தின் 900,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் இரண்டு நாடுகளினதும் அபிவிருத்தி உபாயமார்க்கங்களுடன் இயைபுறுகின்ற GROW பெண்களின் வலுவூட்டலையும் அங்கவீன உள்ளடக்கத்தினையும் உணவுப் பாதுகாப்பினையும் காலநிலைத் தகவமைப்பினையும் வலியுறுத்துகின்றது.

இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான நோர்வே தூதரக மிஷனின் பிரதித் தலைவரான மார்டின் ஆம்டல் பொத்தெய்ம் கூறுகையில்,

“GROW கருத்திட்டத்திற்கு உதவுவதில் அளப்பரிய மகிழ்ச்சியடையும் நோர்வே, வட மாகாணத்தில் வாழும் பல மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றது. நல்லிணக்கம் என்பது ஒரு பயணத்தின் முடிவிடம் அல்ல, அது ஒரு செயன்முறை, இந்தச் செயன்முறைக்கு புசுழுறு இனால் சாதகமாகப் பங்களிப்பு வழங்க முடியும்.” என  குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரான  ஜொனி சிம்ப்சன் தெரிவிக்கையில்,

“ ஒத்துழைப்பும் உள்ளடக்கும் தன்மையும் கொண்ட சான்றடிப்படையிலான ஒரு மாதிரியில் விவசாயிகளையும் கூட்டுறவுகளையும் கம்பனிகளையும் அரசாங்கத்தினையும் சிவில் சமூகத்தினையும் GROW  ஒன்றுசேர்க்கின்றது. இக்கருத்திட்டம் உறுதியான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பும் என்றும் மிகவும் ஒத்திசைவுமிக்க சமுதாயங்களை உருவாக்கும் என்றும் சகலருக்கும் நியாயமான எதிர்காலத்தினை உருவாக்கும் என்றும் நாம் எமது பங்காளர்களுடன் சேர்ந்து நம்புகின்றோம்.” என்று தெரிவித்தார்.

Previous Post

உகந்தைமலையில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும் | ஞா.சிறிநேசன் எம்பி

Next Post

இலங்கை – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர்களுக்கு போட்டி அதிகாரிகள் நியமிப்பு

Next Post
இலங்கை – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர்களுக்கு போட்டி அதிகாரிகள் நியமிப்பு

இலங்கை - பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர்களுக்கு போட்டி அதிகாரிகள் நியமிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures