அவுஸ்திரேலியாவின்முதியோர் இல்லங்களை கொவிட் மோசமாக தாக்கியுள்ளது.சுமார் 6000 பேர் முதியோர் இல்லங்களில் கொவிட்டினால் பாதிக்கப்பட்;டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் முதியோர்இல்லங்களில் அனேகமானவை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதியோர் பாராமரிப்பை வழங்குபவர்கள் அரசாங்கம் அங்குள்ளவர்களையும் பணியாளர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வியாழக்கிழமை வரை 1003 முதியோர் இல்லங்களில் உள்ள 6000 பேரும் 3400 பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்து முதல் 15 வீதமான பணியாளர்கள் ஏற்கனவே தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர் என முதியோர் இல்லங்களின் சங்கங்களின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் முதியோர் இல்லங்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகலாம் என தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் தீவிரபரவல் காரணமாக மூன்றில் இரண்டு முதியோர் இல்லங்கள் பாதிக்கப்படலாம் என அச்சமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.