நாட்டின் கிழக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிகழும்.
குறித்த மாகாணங்களில் மனிதர்களால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்தப்படும் மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வெப்பமான காலநிலை சில நாட்களுக்கு தொடரும். இந்நிலையில் இந்த காலகட்டத்தில் நீரிழப்பு போன்ற நிலைமைகள் ஏற்படலாம். வெப்பமான காலநிலையில் நிலவும்; இடங்களில் வேலை செய்பவர்கள்; போதுமான நீரை அருந்த வேண்டும்.
மேலும் முடிந்தளவு நிழலில் ஓய்வெடுக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
வாகனங்களில் செல்பவர்கள் சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய நாட்களில் வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக விலங்களுக்கான தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
இதன்போது போதுமான நீரினை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் அவற்றை மூடப்பட்ட கூடாரங்களில் நிறுத்தவேண்டும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.