ரெலோ- நாளைய தினம் சில அவசர முடிவுகளை எடுக்க ஒன்று கூடுகிறது.
ரெலோவின் அரசியல் குழு. தலைமைக்குழு ஆகியன நாளை கூடுகின்றன.
வவுனியாவில் நடக்கும் கூட்டங்களில் நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முடிவுகளும் இதன்போது எடுக்கப்படவுள்ளது.
வேட்பாளர் தெரிவு நாளை இடம்பெறமென கூறப்பட்டுள்ள போதும், பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்ட விட்டனர்.
யாழ் மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் களமிறங்கவுள்ளார். இது கட்சியின் சில மட்டத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது, யாழ் மாவட்டத்திலிந்த பிரிந்த சென்ற ரெலோவினர் தமது அணிக்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்து விட்டதாக கூறப்படுகின்றபோதும் ரெலொவிற்குள் அப்படியான ஏற்பாடுகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சியின் முடிவுகளிற்கு கட்டுப்படாமல் அவர் செயற்டுவதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கோடீஸ்வரன் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

