நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் யோசனையை முன்வைப்பதற்கு கடந்த வியாழக்கிழமை கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்டதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவில்லை. நான் மிகவும் பொறுப்புடன் இதனைக் கூறுகின்றேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமரே வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோன்று, அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையும் பிரதமரின் ஒப்பத்துடனேயே முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

