நாடாளுமன்றம் இன்றைய தினம் அவசரமாக கூடுகின்றது.
நேற்று முந்தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரையில் 291 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் அளவில் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் பரபரப்பிற்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இதன்போது அடுத்தடுத்த குண்டு வெடிப்புகள் மற்றும் அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டினை அதிரச் செய்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.