நாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டின் இயல்பு நிலை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அவசரகால நிலைமையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
