உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள நடிகர் அல்வா வாசுவின் குடும்பத்துக்கு அவசர உதவியாக ரூ 20 ஆயிரத்தை நடிகர் சங்கம் மூலம் கொடுத்துள்ளார் நடிகர் விஷால். தனிப்பட்ட முறையில் மேலும் நிதி அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறாராம். நடிகர் அல்வா வாசு கல்லீரல் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். டாக்டர்கள் அவரைக் கைவிட்ட நிலையில், அவரது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு உதவி வழங்க பல முயற்சிகளை நடிகர் விஷால் எடுத்து வருகிறார்.
முதல் கட்டமாக நடிகர் சங்கத்தில் இருந்து 20000 ரூபாயை உடனடி செலவுக்காக அனைவரின் ஒப்புதல் வாங்கி அவருடைய குடும்பத்துக்கு அளித்துள்ளார். அவருடைய மனைவியின் வங்கிக் கணக்குக்கு அனைவரும் பணம் அனுப்புவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் விஷால். நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.