வடக்கு அல்பேர்டா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எட்மன்டன் பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) அவர் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர், கடந்த 5ஆம் திகதி வடக்கு அல்பேர்டாவின் இரு பகுதிகளில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.