தூக்குத் தண்டனை வழங்குவதற்கான அலுகோசு பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட இருவரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிறைச்சாலைகள் தலைமையகத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேண்டுகோள் வெலிக்கடை சிறைச்சாலை நிருவாகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. அலுகோசுவன் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட இருவரும் தற்பொழுது சிறைச்சாலை தலைமையக காரியாலயத்தில் செயலக உதவியாளர் பொறுப்பில் கடமையாற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மரண தண்டனை தற்பொழுது செயற்படுத்தப்படாதுள்ளதனால், தூக்குத் தண்டனை மற்றும் சித்திரவதை என்பவற்றுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட இருவரையும் வெலிக்கடை சிறைச்சாலை கடமையில் ஈடுபடுத்த அதனை நிருவாகம் தீர்மானம் எடுத்துள்ளது.
இருப்பினும், இந்த இவருவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றாதிருக்க சிறைச்சாலை தலைமையகம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

