அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர்.