யாழ்ப்பாணத்தில் சில முக்கிய சந்திகளில் உள்ள அறிவித்தல் பலகைகளின் நிலமை கவலைக்கிடம்தான். சில அறிவித்தல் பலகைகளில் கம்பம் நிலையாய் நிற்க அதிலுள்ள பதாகை நிலத்தில் கிடக்கும், சில இடங்களில் கம்பமும் அறிவித்தல் பதாகையும் சரிந்து கிடக்கும், சில இடங்களில் இரண்டும் கிடப்பில் கிடக்கும். வீதிகளில் அதிலும் தலைமை வீதிகளில் இவ்வாறான அலங்கோல நிலைகளைக் கவனிக்க முடிகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மிக முக்கிய சந்திகளில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த நிறுத்தல் பலகையின் நிலமைதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது. சனத்தொகை கூடிய பாடசாலை அமைவுபெற்றிருக்கும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதைகைக்கு இந்த நிலமை என்பது கவலை தருகின்ற விடயம்தானே.
இந்தப் பாதாகை தேவையற்றது என்றால் ஏன் அவ்விடத்தில் அமைக்கப்பட்டது?. அதற்குரிய செலவுக்கு எவர் பொறுப்பு?, தேவையற்றதெனில் ஏன் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தவில்லை? இதுபோன்று விழுந்தும், வளைந்தும், சரிந்தும் போயுள்ள பதாகைகள் எப்போது சீரமைக்கப்படும்? என்பனதான் தற்போது எஞ்சியுள்ள கேள்விகள். உரிய அதிகாரிகள் இது விடயத்தில் கவனத்தில் கொள்வார்களா…?

