அர்ஜென்டினாவில் நாடு தழுவிய சமூக, தடுப்பு மற்றும் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை, எதிர்வரும் மேஆம் திகதி 10 வரை நீடித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்தன. இந்த நீடிப்பு அறிவிப்புக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை இந்த நடைமுறைகள் முடிவுக்கு வரவிருந்தன.
எவ்வாறாயினும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே குறுகிய நடைப்பயணத்தை அனுமதிப்பது போன்ற சில கட்டுப்பாடுகளை நாடு குறைக்கும் என்று சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 3780பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, 185பேர் உயிரிழந்துள்ளனர். 1030பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதகை அர்ஜென்டினாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

