Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Entertainment

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (27-04-2016) ஆரம்பமாகின்றது

April 27, 2016
in Entertainment, News, World
0

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (27-04-2016)  ஆரம்பமாகின்றது என்பதனை அறியத்தருகின்றோம். ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது கொடியேற்ற திருவிழா. விநாயகப்பெருமான் அழகிய மூசிக வாகனத்தில் வலம் வருவார்கள். சுவாமி சந்நிதி முன்பு கொடிமரத்தில் கொடியேற்றப்படும் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்புபூஜை, தீபாராதனை நடைபெற்று பெருவிழாவுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகும். ஏராளமான மக்கள் திரளாக கலந்து கொள்வதினால் ஆலய தொண்டர்கள் நாளையதினம் (27-04-2016) அன்று தயார் நிலையில் இருப்பார்கள் என்பதினையும் அறியத் தருகின்றோம். ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்கள் தலைமையில் கொடியேற்ற வைபவ நிகழ்வுகள் நடைபெறும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழி நின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும். பிரம்மோத்ஸவம் அல்லது மஹோத்ஸவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுப் பெருவிழாவில் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றம் என்ற துவஜாரோஹணம் நடக்கிறது. கொடியேற்ற நாளன்று இன்று ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்கள் புண்ணியாகவாசனம் மற்றும் ஏனைய ஆகம விதிகளுக்கு அமைய மந்திர சுலோகங்கள் முழங்க மிகவும் சிறப்பாக நிகழ்வுகளை நடாத்தி “துவஜாங்குரம்” இடப்படும் நிகழ்வினையும் நடத்தவுள்ளார்கள். துவஜஸ்தம்பத்தின் (கொடிமரம்) அடியில் அஷ்டதளபத்மம் வரைந்த பிரம்மாவைப் பூசித்து கொடியேற்ற அங்குரார்ப்பணத்தை ஆற்றியிருந்தார்கள். இவற்றினை அடுத்து கொடியேற்றும் துணியில் வரையப்பெற்றுள்ள படத்திற்கு இறை உருவேற்றும் முகமாக “படபிரதிஷ்டை” செய்யப்பெறும். templஇது போலவே தம்பப் பிரதிஷ்டையும் அஸ்திரப் பிரதிஷ்டையும் பலிபீடப் பிரதிஷ்டையும் தனித்தனியே விஷேட ஆகுதிகள் வழங்கி ஹோமம் செய்து ஸ்நபன கும்பபூஜை ஆகியன ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்களினால் வெகு சிறப்பாக நடத்தா திருவருள் பாலித்துள்ளது. கொடிச் சீலையை மூன்று பாகமாகப் பிரித்து அதில் முதற் பாகத்தை மேலும் மூன்று பாகமாக்கி நடுப்பாகத்தில் சற்சதுரம் வரைய வேண்டும். அதில் சுவாமிக்குரிய வாகனத்தையும் (ரிஷபம், மயில், எலி, யானை, கருடன்) அஸ்திரத்தையும் (திரிசூலம்-அங்குசம்-வேல்–சக்கரம்) வரைவதுடன் அதனைச் சுற்றி குடை-கொடி- இரட்டைச்சாமரை- வலப்புறம் சூரியன்- இடப்புறம் சந்திரன் -பத்மம்- சக்ரம் -சங்கு- மத்தளம் -தீபம் -தூபம்- ஸ்ரீவத்ஸம் – சுவஸ்திகம்- கும்பம் ஆகிய மங்கலப் பொருள்களை வரைதல் வேண்டும். கொடிச்சீலையின் மேற்பாகத்தில் பிரம்ம முடிச்சு இடப்பெற வேண்டும் என்பதற்கிணங்க கொடிச்சீலை வரையப்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. இவற்றினைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா நிறைவெய்த பாததீர்த்தம் சமர்ப்பித்து, கும்பதீபம் கற்பூர தீபம் காட்டி, கட்டியம் சொல்லி இறைவனை சகல பரிவாரங்களுடன் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்வதாக கொடியேற்ற உற்சவம் சிறப்பாக ஆலய மகோற்சவ குருக்கள் நவாலியூர் பிரதிஷ்ட பூசனம் சிவஞான வித்தகர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் அவர்களினால் சிறப்பாக நடைபெற இருப்பதினால் அனைவரையும் அழைக்கின்றோம். திருவிழா 27 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக நடைபெறும். விழாக்காலங்களில் அன்பர்கள் பெருந்திரளாக கலந்து இறையருளை பெற்றுய்யுமாறு வேண்டி நிற்கின்றோம். விழாவின் இறுதியில் சிறப்பான அன்னதானம் வழங்கப்படும். ஷேஸ்திர சிலம்பொலி நடன பள்ளியின் ஆசிரியை ஜெனனி குமார் அவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதினையும் அறியத்தருகின்றோம். பகல் கொடியேற்ற வைபவத்தின் சிறப்பு காட்சிகளின் தொகுப்பினை என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Langes, FCPA, FCGA
EasyNews Latestnews
Easy24news.com

Previous Post

இசையை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புடன் “இசை எம்பயர்”

Next Post

உதயன் சர்வதேச விருது வழங்கும் விழா சிறந்த வியாபார தலைமைத்துவ விருது நல்லதம்பி சங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

Next Post

உதயன் சர்வதேச விருது வழங்கும் விழா சிறந்த வியாபார தலைமைத்துவ விருது நல்லதம்பி சங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures