நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய பெயரிடப்படாத வலைத்தள தொடரினை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத முதல் வலைத்தள தொடரில் நடிகர் ஜெய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ஹோப் நடிக்கிறார்.
நடிகர் ஜெய் ஏற்கனவே ‘ட்ரிப்பிள்ஸ்’ என்னும் வலைத்தள தொடரில் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் இரண்டாவது வலைத்தள தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹொட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முக ஆளுமையுடன் திகழும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் முதல் வலைத்தள தொடர் என்பதாலும், நடிகை தானியா ஹோப் நடிக்கும் முதல் வலைத்தள தொடர் என்பதாலும் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.